கோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு

கோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை, பச்சிலை சந்திக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில், மூதுரைச் சேர்ந்த - உப்பு வியாபாரியான சித்திக்(65) என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இவர், சீமெந்து லொறியொன்றை முந்திச் செல்ல முயன்ற போது விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த மூதூர் பொலிஸார், லொறியின் சாரதியை கைதுசெய்ததுடன், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.