
ரயர் தொழிற்சாலையின் அருகே நடைபெற்ற திருட்டு...! (காணொளி)
வலஸ்ஸமுள்ள பிரதேசத்தில் ரயர் தொழிற்சாலையின் அருகே காணப்பட்ட பாதுகாப்பு தலைக்கவசம் ஒன்றை திருடிய சம்பவமொன்றின் சி சி டி வி காட்சிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன.
உந்துருளியில் வரும் இளைஞர் ஒருவர் அந்த தலைக்கவசத்தை திருடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
அவருடன் பயணித்த பெண்ணிற்கு தலைக்கவசம் இல்லாத காரணத்தினால் குறித்த செயலை அவர் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் குறித்த தலைக்கவசத்தில் இருந்த 19600 ரூபா பணத்தொகையும் காணவில்லையென குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றி மேலதிக விசாரணையை வலஸ்ஸமுள்ள காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.