மெக்ஸிக்கோ ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்ஸிக்கோ ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்ஸிக்கோ ஜனாதிபதி அன்ரூஸ் மெனுவல் லோபஸ் ஒப்ரடருக்கு (Andres Manuel Lopez Obrador) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்கான சிறியளவிலான அறிகுறிகள் தென்படுவதாக 67 வயதான அன்ரூஸ் மெனுவல் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வீட்டிலிருந்தே தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் மெக்ஸிக்கோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வது குறித்து, ரஷ்ய ஜனாதிபதியுடன் கலந்தரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே மெக்ஸிக்கோ ஜனாதிபதிககு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்கு மெக்ஸிக்கோ தயாராகியுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதியின் உடல் நிலை சீராகவுள்ளதாக அவரக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ குழு தெரிவித்துளள்து.