உழவு இயந்திரத்தில் பயணித்த தாயின் கையிலிருந்த குழந்தை தவறி வீழ்ந்ததால் இடம்பெற்ற துயரம்
தாயின் கையிலிருந்த குழந்தை தவறி வீழ்ந்ததில் உழவு இயந்திரத்தின் சில்லு ஏறி பரிதாபகரமாக குழந்தை உயிரிழந்த பரிதாபகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த உழவு இயந்திரத்தின் பின்னால் தாயும் குறித்த குழந்தையும் அமர்ந்து சென்றபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உழவு இயந்திரத்தில் சிக்கிய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி யக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9 மாதம் வயதுடைய நாமல்புர பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.