பெற்ற மகளைக் கொன்று புதைத்த தாய்... பரபரப்பு சம்பவம் !

பெற்ற மகளைக் கொன்று புதைத்த தாய்... பரபரப்பு சம்பவம் !

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் வசித்து வருபவர் எஸ்தார் பேபி. இவர் தனது கணவரைப் பிரிந்து தனது தாய் சகாயராணியுடன் இருந்தார்.

அப்போது சகாயராணிக்கும் பாக்யராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக் கண்டித்து வந்த மகள் பேபியை பின்னர் தாய், அவரது தம்பி சேவியர், கள்ளக் காதலர் பாக்கியராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து பேபியை கொன்று புதைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து போலீஸிடம் சென்ற சகாயராணி தன் மகளைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விட்டுவிட்டனர் .

இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு முன் கொலை செய்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் சகாயராணி உட்பட மூன்று பேர் இணைந்து பேபியைக் கொன்றதை போலீஸார் கண்டுபித்துள்ளனர்

இக்கொலைக் குற்றத்தை சகாயராணி ஒப்புக்கொண்டுள்ளார். பெற்ற தாயே மகளைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.