ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிக் கொள்வதாக லசித் மாலிங்க அறிவிப்பு..!

ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிக் கொள்வதாக லசித் மாலிங்க அறிவிப்பு..!

கடந்த 12 வருடங்களாக மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கிய லசித் மாலிங்க ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

லசித் மாலிங்கவின் முடிவு தொடர்பாக மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் அம்பானி பல கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லசித் மாலிங்க விலகினாலும் என்றும் அவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார் என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் 5 ஆண்டுகளுக்கு அவர் மும்பாய் இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என நினைத்திருந்த போது அவர் இவ்வாறான ஒரு தீர்மானத்தை  எடுத்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், எனினும் அவரின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தன் குடும்பத்தாருடன் கலந்தாலோசித்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக லசித் மாலிங்க தெரிவித்திருந்தார்.

லீங் போட்டித் தொடர்களில் இருந்து விடைபெற இதுவே சிறந்த தருணம் எனவும், இந்த தீர்மானத்தை எடுக்கும் முன் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் முகாமையாளர்களுடனும் கலந்தாலோசித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தன் தீர்மானத்திற்கு மதிப்பளித்து அதை ஏற்றுக்கொண்ட அம்பானி குடும்பத்தினருக்கும் அவர் அந்த தருணத்தில் நானன்றி தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீட்டா அம்பானி, பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன, ஆகாஷ் அம்பானி உட்பட அணியின் ஏனைய வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.