வெட்டுப்புள்ளிகள் வெளியாவதற்கு முன்னரே பிரபல பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்..!

வெட்டுப்புள்ளிகள் வெளியாவதற்கு முன்னரே பிரபல பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்..!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாவதற்கு முன்னரே பிரபல பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுதவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசியல் காரணங்களுக்காக இந்த வருடம் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என கல்வியமைச்சர் ஜி.எல்.பிரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கு புள்ளிகளை தீர்மானிக்கும் அளவுகோல் தொடர்பில் அமைச்சரவையின் அவதானத்திற்கு கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.