வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம்
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பு செயலிகளில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சத்தை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் துவங்கி உள்ளது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் துவங்கி இருக்கிறது. புதிய அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா V2.20.194.7 பதிப்பிலும், வாட்ஸ்அப் ஐபோன் பீட்டா V2.20.70.26 வெர்ஷனில் சோதனை செய்யப்படுகிறது. அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. வாட்ஸ்அப் தற்சமயம் இந்த அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
எனினும், இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் தற்சமயம் சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியிலும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் சாட்களில் ஒருமுறை மட்டுமே அனிமேட் ஆகும் என கூறப்படுகிறது. இவை மீண்டும் அனிமேட் ஆக பயனர்கள் ஸ்கிரால் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்டிக்கர்களை இயக்குவதற்கான வசதியினை வழங்கியது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதை க்ளிக் செய்ததும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்ய வேண்டும்