வன்முறைகளில் ஈடுபட்ட 13 பேர் கைது...!

வன்முறைகளில் ஈடுபட்ட 13 பேர் கைது...!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் காவல்துறை விசேட அதிரப்படையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த சுற்றிவளைப்புக்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் கிளிநொச்சி பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேரும் யாழ்ப்பாணப் பகுதியில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.