விசேட மருத்துவ பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது...!
அங்கொட பகுதியில் உள்ள ஐ.டி.எச். எனப்படும் தேசிய தொற்று நோய் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட டோமோகிராபி ஸ்கேனிங் பிரிவு இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மதிப்பின்படி 60 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பிரிவு கணினிமயமாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இந்த மருத்துவமனை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த பிரிவு நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.