தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் ஒன்றுகூடல்!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் ஒன்றுகூடல்!

கொழும்பு நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில காவல்துறை அதிகார பிரதேசங்களில், பொதுமக்கள் ஒன்றிணைதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட வௌிவேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நேற்றைய தினம் அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூகமாக ஒன்றிணையும்போது, எவராவது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அது மீண்டும் கொத்தணியாக பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதன்போது குறித்த பிரதேசத்தை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, தொடர்ச்சியாக சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய செயற்பட்டால் குறித்த பிரதேசத்தை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கக் கூடியதாக இருக்கும் என குறித்த பிரதேச மக்களிடம் கோருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.