யாழில் சுத்திகரிப்பு பணியில் களமிறங்கியது சிறப்பு அதிரடி படை!

யாழில் சுத்திகரிப்பு பணியில் களமிறங்கியது சிறப்பு அதிரடி படை!

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யாழ். பிரதேச செயலக பிரிவில் உள்ள பாடசாலைகளில் கிருதித் தொற்று விசுறும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடி படையினரால் இந்தப் பணி யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி 05 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் யாழ். பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நேற்று புதன்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.