ஹப்புத்தளையில் மரண வீட்டிற்கு சென்ற மூவருக்கு கொரோனா..!

ஹப்புத்தளையில் மரண வீட்டிற்கு சென்ற மூவருக்கு கொரோனா..!

ஹப்புத்தளையில் இன்று மேலும் மூன்று பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஹப்புத்தளையை சேர்ந்த 3 பேர் மட்டக்குளி பகுதியில் வசித்து வந்த நிலையில், மரண வீடொன்றிற்காக ஹப்புத்தளைக்கு சென்றுள்ளனர்.

குறித்த மூவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்தே அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொதுசுகாதார பரிசோதகர் எஸ் சுதர்ஷன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எனினும், அவர்கள் சுகாதார பாதுகாப்பு விதிகளுக்கு அமையவே அந்த மரணவீட்டில் கலந்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தொற்றுறுதியானவர்கள் ஹப்புத்தளை - கஹகொல்ல, பங்கட்டி மற்றும் தங்கமலை ஆகிய தோட்டங்களை சேர்ந்தவர்கள் என ஹப்புத்தளை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சுதர்ஷன் தெரிவித்தார்.