யாழில் பொலிஸாரிடம் சிக்கிய நகைக்கடை உரிமையாளர்கள்

யாழில் பொலிஸாரிடம் சிக்கிய நகைக்கடை உரிமையாளர்கள்

திருட்டு நகைகளை கொள்வனவு செய்ததாகத் தெரிவித்து யாழ்.நகரின் மத்தியில் நகைக்கடை வைத்திருக்கும் நான்கு கடை உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து திருடன் ஒருவனை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் களவாடப்பட்ட நகைகளை நகைக்கடைகளில் விற்பனை செய்து விட்டார் எனத் தெரிவித்த நிலையில் திருடனை நகைக்கடைகளுக்கு கூட்டிச் சென்ற பொலிஸார் அவன் இனம் காட்டிய நகைக்கடை உரிமையாளர்களை கைது செய்தனர்.

கைது செய்த நகைக்கடை உரிமையாளர்களில் மூவர் கஸ்தூரியார் வீதியிலும் ஒருவர் மின்சாரநிலைய வீதியிலும் கடை நடத்துபவர்களாவர்.ஒரு கடை உரிமையாளர் மட்டும் 18 கிராம் தங்கத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.