குளத்தில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணிகள் தீவிரம்..!!

குளத்தில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணிகள் தீவிரம்..!!

கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

கல்மடு நகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்தநிலையில் பிரதேச மக்கள் உள்ளிட்ட தரப்பினர் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.