தெரிஞ்சிக்கங்க…வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்
வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி ஆகியும் சொல்லலாம்.
$ சுடச்சுட சாதத்தை வாழைஇலையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
$ வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
$ வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இரண்டுக்கும்.
$ வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.
$ வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை.
$ பித்தம் தணியும். நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி மிக நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.