
தெரிஞ்சிக்கங்க…உங்கள் வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்டி வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவர இந்த ஒரு பொருள் போதும்…
அனைவருக்குமே மகிழ்ச்சியான எந்த குறையும் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையிருக்கும். இந்த வகையில் அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும் மகாலட்சுமியின் பார்வையை வீட்டிற்குள் விழ வைக்க கூடிய ஒரு பொருள் தான் சங்கு…!
சங்கினை வீட்டில் வைத்து வழிபட்டால் பல நன்மைகள் நம்மை தேடி வரும் என்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.. இந்த வலம்புரி சங்கினை வீட்டில் வைத்திருந்தால் இழந்த மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை திரும்ப பெற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன..
அப்படி என்ன மகிமை இருக்கிறது இந்த சங்கில், இந்த சங்கினை வீட்டில் எப்படி வைக்க வேண்டும், இந்த சங்கினை வழிபடும் முறைகள் என்னென்ன? என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
செவ்வாய் தோஷம்
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.
வியாபார விருத்தி
தற்காலத்தில், சில வணிகத்தலங்களில், வணிகம் செழிக்க, சங்கை வைத்து பூஜிக்கின்றனர். பழங்காலங்களில், புதிதாக கட்டிய வீடுகளில் சங்கை வைத்து, ஒரு மண்டலம் எனும் 48 நாட்கள் பூஜித்து, சங்கு பூஜை செய்து, வீட்டில் அனைத்து வகை செல்வங்களும் நிறைந்து, வளமுடனும் நலமுடனும் வாழ்ந்தார்கள் என்ற ஆன்மீகப்பெரியோர்களின் வாக்கால், இக்காலத்திலும் சிலர் சங்கு பூஜை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மஹத்தி தோஷம்
தினமும் வலம்புரி சங்கினை பூஜித்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் எனப்படும் கடுமையான தோஷம் நீங்கி விடும் என்று புராணங்கள் கூறுகின்றன.
வாஸ்து குறிப்பு 1
உங்கள் வீட்டில் சங்கை வைக்க முடிவெடுத்துவிட்டால் குறைந்தது இரண்டு சங்கை வாங்குங்கள். இரண்டு சங்குகள் வாங்கினாலும் அவை இரண்டும் தனித்தனியாகத்தான் வைக்கப்பட வேண்டும். இரண்டு சங்குகளையும் ஒரே இடத்தில் வைக்கக்கூடாது என்று வாஸ்துசாஸ்திரம் கூறுகிறது.
வாஸ்து குறிப்பு 2
இரண்டு சங்குகளில் ஒன்றை மட்டுமே ஊதுவதற்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் சங்கில் ஒருபோதும் தண்ணீர் விடக்கூடாது, அதேபோல அந்த சங்கில் எந்த மந்திரத்தையும் கூறக்கூடாது. தனி இடத்தில் மஞ்சள் நிற துணியின் மீது சங்கு வைக்கப்பட்டால் உங்கள் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நிகழும்.
வாஸ்து குறிப்பு 3
கடவுளை வழிபடுவதற்காக வாங்கிவரப்பட்ட சங்கானது மிகவும் புனிதமான பொருளாகும். எனவே அதனை சுத்தப்படுத்தும் போது கங்கை நீர் போன்ற புனிதமான நீரை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல இந்த சங்கை எப்பொழுதும் ஒரு வெள்ளை துணி கொண்டு மூடிவைக்க வேண்டும். இதனை வைத்து விளையாடுவது என்பது உங்கள் இல்லத்தின் நிம்மதிக்கு நல்லதல்ல.
வாஸ்து குறிப்பு 4
இரண்டு சங்குகளில் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் சங்கு எப்பொழுதும் ஊதுவதற்கு பயன்படுத்தப்படும் சங்கை விட எப்பொழுதும் உயர்ந்த இடத்தில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் சங்கானது திருமாலின் சங்காக கருதப்படுகிறது.
வாஸ்து குறிப்பு 5
ஒரு சங்கைதான் எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும். ஒரே சங்கை இரண்டு செயல்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. கோவிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி எந்த சங்கை எதற்கு பயன்படுத்த்துகிறோமோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வாஸ்து குறிப்பு 6
பூஜையின் போது ஒருபோதும் சிவலிங்கத்திற்கு மேலே சங்கு இருக்கக்கூடாது. எந்த சடங்காக இருந்தாலும் சிவபெருமானுக்கு மேலேயோ அல்லது சிவலிங்கத்தின் மீது படும் படியோ வைக்கக்கூடாது.