பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “கபாலி” குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது
வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல், மதுபோதையில் பெண்களிடம் சேஷ்டை செய்தல், வீதிகளில் செல்வோரை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “கபாலி” குழுவின் உறுப்பினர் ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு,உதயார்கட்டு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்