பட்ஜெட் விலையில் போட் இயர்பட்ஸ் அறிமுகம்
இந்தியாவில் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமான போட் ஏர்டோப்ஸ் 511வி2 பெயரில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
புதிய இயர்பட்சில் நான்கு மைக்ரோபோன்கள், ப்ளூடூத் 5.0, IPX4 சான்று மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 5.0 மூலம் இணைந்து கொள்வதால், இவை சாதனங்களுடன் சீரான இணைப்பினை தொடர்ந்து வழங்கும்.
போட் ஏர்டோப்ஸ் 511வி2 இயர்பட்ஸ் 6 மில்லிமீட்டர் ரிதமிக் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இதில் உள்ள நான்கு மைக்ரோபோன்கள் அழைப்புகளின் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இது IPX4 சான்று பெற்று இருப்பதால் உடற்பயிற்சிகளின் போதும் பயன்படுத்தலாம். இதன் இயர்பட்களில் மல்டி-ஃபன்ஷன் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பிளேபேக், வால்யூம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இயக்க முடியும்.
புதிய இயர்பட்சில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், ஆறு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இதன் கேசில் 500 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும்.
போட் ஏர்டோப்ஸ் 511வி2 ஆக்டிவ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசானில் நடைபெறுகிறது.