யாழ் நீர்வேலியில் மீண்டும் ஒரு விபத்து!! மயிரிழையில் உயிர்தப்பினர்!!
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வானின் ரயர் வெடித்ததில் வந்த வேகத்தில் வீதியை விட்டு விலகி தென்னை மரத்துடன் மோதி காணிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் நேற்று 12.30 மணியளவில் நீர்வேலி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
வானில் பயணித்தவர்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர். வான் கடுமையாக சேதமடைந்துள்ளது.
ரெலிகொமிற்கு சொந்தமான வான் அம்பாறையில் இருந்து வருகைதந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமை யாழ் மாநகரசபை தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.