குடிநீருக்கு அலையும் கரவெட்டி கிழக்கு மக்கள்

குடிநீருக்கு அலையும் கரவெட்டி கிழக்கு மக்கள்

கரவெட்டி கிழக்கிலுள்ள வளர்மதி சனசமூக நிலையத்திற்கு  அருகாமையில் உள்ள மக்கள்  குடிநீருக்கு மிகவும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினர்  குடிதண்ணீர் வழங்கி வருகின்றார்கள். தினமும் குடிநீர் வழங்குவது இல்லை தாங்கள் விரும்பிய நேரத்தில் மட்டும் அங்கு குடிநீர் வழங்கி வருகின்றார்கள். மக்கள் குடிநீருக்காக தங்களுடைய கொள்கலன்களை வரிசையில் அடுக்கி காலையிலிருந்து மாலை வரை காவல் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒழுங்கான முறையில் குடிநீரை கொண்டு வருவதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அத்துளு கிணற்றுக்கு ஒரு மைல் தூரதுக்கு மேல்  நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் குடிநீருக்கான வாகனங்கள் நின்றும் ஒழுங்கான முறையில் குடிநீர் வழங்க முடியாத நிலையில் மக்கள் குடிநீருக்கு  தவிக்கிறார்கள்.

பிரதேச செயலகத்தின்  ஒரு பவுசர் வாகனம்  யாழ்ப்பாணத்திற்கு கொடுத்ததினால் பிரதேச செயலகத்தினால் வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. கரவெட்டி கிழக்கு மக்களுக்கு யாழ் அரசாங்க அதிபர் அவர்களுக்கும் வடமாகாண ஆளுநருக்கும் குடிநீர் பிரச்சனையை நேரில் நீங்கள் வருகை தந்து பார்வையிட்டு கரவெட்டி கிழக்கு மக்களுக்கு வழங்குவதற்கான பூர்வாங்க உதவியை செய்து தருமாறு வளர்மதி சனசமூக நிலையத்தின் உள்ள மக்களும் அப்பகுதிக்கு அண்டிய பகுதியில் உள்ள மக்களும் கேட்டுக் கொள்கிறார்கள். அப்பகுதியில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு இதுவரை குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்தி கொள்ளுகின்றார்கள்.