யாழில் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த விசமிகள்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணுவில் பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்றிரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
இதனால் முச்சக்கர வண்டி பகுதியளவில் எரிந்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.