உங்கள் லட்சியத்தை எளிதாக அடைய வழிகள்

லட்சியத்தை அடைவதற்கான முதல் செயல் இலட்சியத்தை நோக்கி செல்வதற்கான பாதையை வகுத்தல் அதாவது சரியான திட்டம் தீட்டுவது, பிறகு முறையான அந்த திட்டத்திற்கு பலன் கிடைக்கும் அளவிற்கு கடுமையாக உழைப்பது.

நம் எல்லோர் வாழ்க்கையிலும் லட்சியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நம்மில் வெகு சிலர் மட்டுமே தங்கள் லட்சியத்தை முழுமையாக அடைகின்றனர். காரணம் என்ன? நம்மில் பலருக்கு நம்முடைய லட்சியங்களில் தெளிவில்லை! பலர் பெயரளவில் லட்சியம் வைத்திருப்போம்! ஆனால் அதை அடைய முயற்சி இருக்காது. முயற்சி என்பது என்ன? நீருக்குள் மூழ்கிய அவன் எத்தகைய பிரயத்தனப்பட்டு வெளியே வர முயற்சிப்பான்? அத்தகைய முயற்சி இருந்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்று விவேகானந்தர் கூறுகிறார்.

 

உண்மையில் நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபடுகிறோம். லட்சியத்தை அடைவதற்கான முதல் செயல் இலட்சியத்தை நோக்கி செல்வதற்கான பாதையை வகுத்தல் அதாவது சரியான திட்டம் தீட்டுவது, பிறகு முறையான அந்த திட்டத்திற்கு பலன் கிடைக்கும் அளவிற்கு கடுமையாக உழைப்பது.

 

உண்மையில் சிலர் நன்றாகவே திட்டம் தீட்டுவார்கள். ஆனால் செயல்படுவதில்லை. காரணம் தினப்படி பிரச்சினைகளாலும்அவர்களை அழுத்திக் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளின் நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும், திட்டத்தை செயல்படும் காலத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றுவிடும்.

 

 

மேலும் சிலர் திட்டத்தை செயல்படுத்தும்போது வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் துவண்டுபோய் பாதியிலேயே இலட்சியத்தை கைவிடுவது.

 

சரி அப்படியென்றால் லட்சியத்தை அடைந்தவர்கள் எல்லாம் எப்படி இருக்கின்றார்கள் என்ற வினா எழுகிறது அல்லவா? உண்மையில் எல்லாவகை நெருக்கடிகளையும் சந்தித்து திட்டத்தை செயல்படுத்தும்போது வருகின்ற தடைகளை தகர்த்துதொடர்ந்து போராடி திரும்பத் திரும்ப தோல்விகளை சந்தித்தும் கூட சோர்ந்து போகாமல்உற்சாகமான மனநிலையில் செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவர்கள்தான் வெற்றிக்கனியை சுவைக்கின்றனர்.

 

ஒரு லட்சியத்தை அடையே- வண்டுமென்றால் சரியான திட்டம் மிக அவசியம் என பார்த்தோம். அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமும் மிக எளிதாக இருந்தால் நம்முடைய லட்சிய பயணம் சுகமாக இருக்கும் அல்லவா.அது பற்றி இக்கட்டுரையில்பார்ப்போம்.

 

முதலில் நம்முடைய லட்சியம் எது என்பதை பலமுறை சிந்தித்து ஆராய்ந்து தெளிவாக ஒரு வரியில் எழுதும் அளவிற்கு தீர்மானிக்க வேண்டும்.

 

பிறகு இந்த லட்சியம் நம்வாழ்க்கைக்கு ஏன் முக்கியம், இதை நாம் ஏன் அடைய வேண்டும் என ஒரு பக்கத்திற்கு அதைப் பற்றி எழுதுங்கள் ஒருவேளை நீங்கள் எடுத்துக்கொண்ட லட்சியம் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லையா என்பதை இந்த சிந்தனை சீர்படுத்தும்.

 

பிறகு உங்கள் லட்சியத்தை மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரியுங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு அடைவது என அதற்கான செயல்களை வரிசையாக எழுதுங்கள். இப்போது உங்கள் லட்சியத்தை எவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்களில் அடையப் போகிறீர்கள் என்று தெளிவாக வரையறை செய்யுங்கள். ஒவ்வொரு கால அளவிலும் உங்கள் லட்சியத்தில் எவ்வளவு தூரம் நீங்கள் முன்னேறிஇருப்பீர்கள் என்பதை திட்டமிடுங்கள் உதாரணத்திற்கு நீங்கள் ஒரு அழகான பண்ணை வீடு வாங்கப்போகிறீர்கள் என்பது லட்சியமாக இருப்பின் அந்த பண்ணை வீடு எந்த இடத்தில் வாங்கப் போகிறீர்கள், எவ்வளவு ரூபாய்க்கு வாங்க போகிறீர்கள், அந்த பண்ணை வீடு அமைப்பு எப்படி எல்லாம் இருக்கும், அங்கே வீடு கட்ட எவ்வளவு செலவாகும், உங்களிடம் தற்போது எவ்வளவு பணம் உள்ளது, மேற்படி எவ்வளவு பணம் வேண்டும், மேற்படி தேவைப்படும் பணத்தை எவ்வாறு சம்பாதிக்கப் போகிறீர்கள், அதற்கான திட்டம் என்ன, அதை எவ்வளவு காலத்திற்குள் உங்களால் சம்பாதிக்க முடியும், என்பனபோன்று உங்கள் திட்டத்தை தெளிவாக வரையறை செய்யுங்கள்.

 

இவ்வாறு உங்கள் திட்டத்தை அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொண்ட பின்னால் ஒவ்வொரு நாளும் உங்கள் லட்சியத்தை அடைய என்ன செய்யப்போகிறீர்கள் என சிந்தனை செய்துசிறுசிறு செயல்களாகப் பிரித்து ஒவ்வொரு நாளும் சில குறிப்பிட்ட செயல்களை நீங்கள் தொடர்ந்து உங்கள் லட்சியம் நிறைவேற செய்து கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்யும்போது குறிப்பிட்ட வளர்ச்சியை நீங்கள் அடைகிறீர்கள் எனும்போது உங்களையே நீங்கள் பாராட்டி கொள்ளுமாறு உங்களுக்கே சில பரிசுகளை கொடுத்து கொள்ளுங்கள்.

 

திட்டத்தின் தடைகள் வரும்போது மாற்று யோசனைகள் உடன் புதிய திட்டங்களை உருவாக்குங்கள் முன்பிருந்த குறைகளை நீக்கி புதிய வழிகளை ஆராயுங்கள் இவ்வாறு செய்யும்போது சோர்வடையாமல் இருக்க இந்த லட்சியத்தை அடைந்தால் என் வாழ்க்கை எந்த அளவிற்கு மேம்படும் என்பதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். அந்தகட்டுரையை அவ்வப்போது படித்து திருத்துங்கள். திரும்பத் திரும்ப உங்கள் லட்சியம் நீங்கள் அடையும்போது உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் உயர்வை பற்றி உங்கள் சிந்தனை உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். இவ்வாறு லட்சியத்தை நோக்கி பயணிக்கும்போது உங்கள் உடல் நிலை மனநிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். மிக முக்கியமான செய்தி என்னவென்றால் நீங்கள் எந்த மாதிரியான லட்சியத்தை அடைய விரும்புகிறீர்களோ அதேபோன்ற லட்சியங்களை உங்களுக்கு முன்னால் அடைந்தவர்களின் வாழ்க்கையை அவர்கள்கையாண்ட வழிமுறைகளை கூர்ந்து கவனித்து அவற்றிலிருந்து உங்களுக்கு தேவைப்படும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

மேற்படி செயல்களை செய்துவரும்போது உங்களை அறியாமல் மிக இயல்பாக நாம் லட்சியத்தை நோக்கி கணிசமான தூரம் நெருங்கி வந்திருப்பதை உணர முடியும். ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் மிகப் பெரியக ல்விக்கூடங்களையும் பல புகழ் பெற்றதொழில் நிறுவனங்களையும் வெற்றிகரமாக ஆரம்பித்து சாதனை சிகரத்தில் நின்றார் அப்போதுஅவரிடம் நீங்கள் இந்த நிலைக்கு எப்படி வந்தீர்கள் என்ற கேள்வி கேட்டபோது அவர் சொன்ன பதில் என்முன்னால் நிறைய வாய்ப்புகள் தொடர் சங்கிலிபோல் சென்று கொண்டே இருக்கிறது. நான் அவைகளை என்னால் முடிந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்கிறேன் அவ்வளவுதான். பல ஆண்டுகள் கழித்து நான் என்னையே திரும்பிப்பார்த்தபோது இந்த பெரிய மாடமாளிகை கூட கோபுரங்கள் உடைய நிறுவனங்களுக்கு சொந்தக்காரனாக இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது என்றார்.

 

எனவே நாம் தெளிவாக சிந்தித்து முறையாக திட்டமிட்டு கடினமாக உழைத்தால் நம் முன்னாலும் வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் அதை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் நாமும் சாதனையாளர்கள் தான்!!