நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்

விராலிமலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


விராலிமலை மற்றும் வடுகபட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப் பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர், விராலிமலை, ராஜாளிப்பட்டி, கொடும்பாளுர்,கோமங்களம், தேன்கனியூர், சீத்தப்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கீரனூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குளத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர், குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரகதம்பாள்புரம், சத்தியமங்களம், முத்துகாடு, காவேரிநகர், திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.