அமில பிரசன்னவிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டார்
மாத்தறை - மிதிகம பகுதியில் மாக்நதுரே மதூஷ் இற்கு மிகவும் நெருங்கியவரான அமில் பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் சன்சைன் சுத்தாவிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் சிந்தக்க என அழைக்கப்படும் ஹரக் கட்டா என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல் துறை விசேட அதிரடி படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
சிந்தக்க என அழைக்கப்படுபவர் மிதிகம பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களை புரியும் குழுவொன்றின் உறுப்பினர் எனவும் காவல் துறை விசேட அதிரடிபடையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிந்தக்கவின் உதவியாளராக செயற்பட்டு வந்த அத்துருகிரிய ஜெரம் என்பவரை கொண்டு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சன்சைன் சுத்தா காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.