கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 635 பொலிஸ் அதிகாரிகளும் 204 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.