குறைந்த விலை வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்

ஐகியர் நிறுவனம் புதிய ட்ரூ வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த அக்சஸரீ பிராண்டு ஐகியர் புதிதாக ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய சவுண்ட்பார் என்செம்பிள் என அழைக்கப்படுகிறது.

 

 

இந்த சவுண்ட்பார் பில்ட்-இன் சப் வூபர், 20 வாட் பவர் வழங்குகிறது. இது பேட்டரியால் இயங்குகிறது. மேலும் இது மறு சுழற்சி செய்யப்பட்ட மரத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான ஏபிஎஸ் பிளாஸ்டிக் ஸ்பீக்கர்களை விட சிறப்பான ஆடியோ தரம் வழங்குகிறது.

 

 ஐகியர் என்செம்பிள்

 

அதிகபட்சம் 20 வாட் பவர் அவுட்புட் வழங்கும் ஐகியர் என்செம்பிள் முன்புறத்தில் நான்கு 5 வாட் ஸ்ப்லிட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதில் உள்ள பில்ட்-இன் சப் வூபர் அதிக பேஸ் வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வசதி வழங்கப்பட்டு உள்ளது.

 

இவற்றுடன் பில்ட் இன் எப்எம் ரேடியோ, யுஎஸ்பி போர்ட், 2400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்பீக்கர் 3 முதல் 5 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

ஐகியர் என்செம்பிள் போர்டபிள் ஸ்பீக்கர் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.