ட்விட்டர் அதன் தளத்திற்கு ஒரு புதிய வகை ட்வீட் - "ஆடியோ ட்வீட்ஸ்" என்னும் புதிய அம்சத்தினை அறிமுகம் செய்கின்றது.
ட்விட்டர் அதன் தளத்திற்கு ஒரு புதிய வகை ட்வீட் - ஆடியோ ட்வீட்ஸ் என்னும் புதிய அம்சத்தினை அறிமுகம் செய்கின்றது. பயனர்கள் ஆடியோ வடிவத்தில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
இந்த அம்சம் இப்போது சில iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும், இருப்பினும் அனைத்து iOS பயனர்களுக்கும் “வரவிருக்கும் வாரங்களில்” வரும் என்று நிறுவனம் கூறுகிறது. Android அல்லது வலைத்தளத்தில் எப்பொழுது இந்த அம்சம் வரும் என இதுவரை எந்த தகவலையும் ட்விட்டர் வெளியிடவில்லை.
பயனர்கள் சாதாரணமாக ஒரு புதிய ட்வீட்டை எழுதலாம், ஆனால் இப்போது, ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை இணைப்பதற்கான விருப்பங்களுடன், பயனர்கள் விரைவான ஆடியோ செய்தியை பதிவுசெய்யக்கூடிய புதிய பொத்தானும் உள்ளது.