கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்து - மீண்டும் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ரொக்ஸி க்ளோரொகுயினை (hydroxychloroquine) கொரோனா வைரஸ் தடுப்பு வைத்திய பரிசோதனைக்கு மீள பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி குறித்த நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த நிலையில், நேற்றைய தினம் உலக சுகாதார ஸ்தானபம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் 65 இலட்சத்து 62 ஆயிரத்து 502 பேருக்கு இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
3 இலட்சத்து 86 ஆயிரத்து 784 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 இலட்சத்து 61 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.