
ஒரே நாளில் முடிக்கப்பட வேண்டும் - காலக்கெடு வழங்கியுள்ள இராணுவத் தளபதி
இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி லெப்ஃடினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய, உரிய முறையில் முன்னெடுக்குமாறு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி மொத்தமாக 10 ஆயிரத்து 655 பிசிஆர் பரிசோதனைகள் நேற்றையதினம் மாத்திரம் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்புற்ற 5 இலட்சத்து 45 ஆயிரத்து 43 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.