நிர்ணய அரிசி விலைக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும்...!
நிர்ணய அரிசி விலைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
புறக்கோட்டையில் அமைந்துள்ள மொத்த விற்பனை சந்தைக்கு இன்றைய தினம் விஜயம் செய்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகூடிய சில்லறை விலைக்கே மொத்த விற்பனை சந்தைக்கு வழங்கும் நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறித்த நிர்ணய விலையை கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதற்காகவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.