தஹம் பாடசாலை ஆசிரியைகளுக்கு தேசிய உற்பத்தியிலான சேலை..!

தஹம் பாடசாலை ஆசிரியைகளுக்கு தேசிய உற்பத்தியிலான சேலை..!

தஹம் (அறநெறி) பாடசாலை ஆசிரியைகளுக்கான உத்தியோகப்பூர்வ உடையாக (சீருடை) தேசிய உற்பத்தியிலான சேலைகளை வழங்குவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டுக்கு 76 ஆயிரம் சேலைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாட்டிலுள்ள சுமார் 11 ஆயிரம் தஹம் பாடசாலைகளுக்கு 182.4 மில்லியன் ரூபாய் செலவில் சேலைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.