
கொரோனா சிகிச்சைக்காக 49 வைத்தியசாலைகள்
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இதுவரை 49 வைத்தியசாலைகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கொரோனா நோயாளர்களுக்காக 1100 கட்டில்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 4 பேர் மாத்திரமே அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் 0117 966 366 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.