சந்தைப்படுத்தல் சபையை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

சந்தைப்படுத்தல் சபையை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை, சந்தைப்படுத்தல் சபையை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க விவசாயக் கூட்டுத்தாபன சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, வாசனைத்திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டு கடந்த 2008 யூலை மாதம் 27 ஆம் திகதி முதல்; நிறுவனத்தை மூடுவதற்கு, குறித்த மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபை, தற்போது கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவாப்பட்டை, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப்பயிர்ச்செய்கை அபிவிருத்தியுடன் தொடர்புடைய கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த இராஜாங்க அமைச்சால் அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான ஒரு பொறிமுறை அவசியமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையை மீண்டும் நடாத்திச் செல்வதற்காக பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.