தொழிற்துறைகளின் பணிகளை செயற்திறனுடன், முன்கொண்டு செல்ல விசேட இலக்கங்கள் அறிமுகம்...!

தொழிற்துறைகளின் பணிகளை செயற்திறனுடன், முன்கொண்டு செல்ல விசேட இலக்கங்கள் அறிமுகம்...!

கொவிட்-19 பரவல் காரணமாக தொழிற்துறைகளின் பணிகளை செயற்திறனுடன், முன்கொண்டு செல்வதற்காக தொழிற்துறையினருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க கைத்தொழில் அமைச்சினால் மூன்று விசேட இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 0713 976 406, 0113 158 117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி வரி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 0770 820 775 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கையாள்வதற்கு மூன்று பிரதானிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.