
அனுமதி வழங்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமில்லை...!
முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் என்பனவற்றில் அனுமதி வழங்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமில்லை என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், நிர்மாணத்துறை, கடற்றொழில் துறை, விவசாயம், பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஊரடங்கு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை, புளத்கொஹுபிட்டி, ஹெம்மாத்தகம மற்றும் கிரிவுல்ல காவல்துறை அதிகார பிரதேசங்களும், கலிகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசங்களும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் 112 காவல்துறை அதிகார பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.
குருநாகல் மாநகர சபை அதிகார பகுதிகளிலும், குளியாப்பிட்டி காவல்துறை பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட காவல்துறை அதிகார பிரிவிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.