பாராளுமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபடும் மூன்றாவது ஊடகவியலாளருக்கும் கொரோனா

பாராளுமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபடும் மூன்றாவது ஊடகவியலாளருக்கும் கொரோனா

பாராளுமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் மற்றுமொருவருக்கும் இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பாராளுமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனம் காணப்பட்டவர் ‘மவ்பிம’பத்திரிகையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவார காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது ஊடகவியலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சண்டேரைம்ஸ் மற்றும் மவ்பிம பத்திரிகைகளை சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை பாராளுமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக தொற்றுக்கு உள்ளாவதை அடுத்து இன்றையதினம் பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற போதிலும் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.