கொத்தணியை ஒழிக்க இரண்டு மாதங்கள் தேவை! ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

கொத்தணியை ஒழிக்க இரண்டு மாதங்கள் தேவை! ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

இரண்டாவது கொரோனா பரவலை அடுத்து, நாட்டிலிருந்து கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நோயாளிகள் சமூகத்தில் தீவிரமாக செயல்படும் இளம் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டால் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

தற்போது புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

இருப்பினும், இது எதிர்வரும் நாட்களில் அதிகமான நோயாளர்களை அடையாளம் காண வாய்ப்பு இருப்பதை நிராகரிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.