எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ள வெலிசர பொருளாதார மத்திய நிலையம்
வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (09) மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினரின் உதவியுடன் குறித்த பொருளாதார மத்திய நிலையம் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெலிசர பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று கமத்தொழில் அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள இரத்மலானை, பொகுந்தர, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை நாளைய தினம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதற்கமைய, அங்குள்ள சேவையாளர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் இன்று முதல்; மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.