
மீண்டும் திறக்கப்பட உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள்..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய 50க்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தொழிற்பயிற்சி நிலையங்களை முதலில் திறக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள பாதுகாப்பு முறைமைகளை அமைய இந்த நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.