இன்று வானில் இடம்பெறவுள்ள மாற்றம் - நாசா வெளியிட்டுள்ள தகவல்
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ´புளூ மூன்´ நிகழ்வு இன்றையதினம் இடம்பெறவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு மீண்டும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறும்.
இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும்.
இதனை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்றும் புளூ மூனை ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்றும், டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை சற்று பெரிதாக காட்டும் என வானியல் கல்வியாளர் ஜெப்பரி ஹண்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.