இந்தியாவில் ஒரேநாளில் அதிகபட்ச வைரஸ் பாதிப்பு: 334 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரேநாளில் அதிகபட்ச வைரஸ் பாதிப்பு: 334 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 12 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், மத்திய சுகாதாரத்துறை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையின்படி நேற்று ஒரேநாளில் 334 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.

இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 324 ஆகவும், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 384 ஆகவும் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் 52.95 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் நேற்று 334 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 114 பேரும், டெல்லியில் 67 பேரும், தமிழகத்தில் 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் 27 பேர், உத்தரப் பிரதேசத்தில் 18 பேர், ஹரியானாவில் 12 பேர், மேற்கு வங்கத்தில் 11 பேர், கர்நாடகாவில் 8 பேர், பஞ்சாப், மத்தியப் பிரதேசத்தில் தலா 6 பேர், ராஜஸ்தானில் 5 பேர், பிஹாரில் 3 பேர், ஜம்மு காஷ்மீர், ஆந்திராவில் தலா 2 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், புதுச்சேரி, தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்” என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.