வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்ததுள்ளது.
இன்று காலை சுமார் 09.37 மணியளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டியதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 23,000.54 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

இதேவேளை இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை சுமார் 250,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரியாக 63,000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.