பாடசாலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ; சமூக வலைதளத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

பாடசாலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ; சமூக வலைதளத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த 9 வயது மாணவி பாடசாலையின் 4 வது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

தொடர் விசாரணை

மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பாடசாலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ; சமூக வலைதளத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ | 9 Year Student Commits Suicide By Jumping School

பொலிஸார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பாடசாலை நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறி்த்த மாணவி பாடசாலையின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.