சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; முக்கிய சந்தேக நபர் கைது

சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; முக்கிய சந்தேக நபர் கைது

   பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கடலுக்குள் வீசப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டிருந்த்து.

சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; முக்கிய சந்தேக நபர் கைது | Woman Body Sangupiddy Bridge Main Suspect Arrested

சடலமாக மீட்கப்பட்டவர் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா ஆவார். 

அதேவேளை  பெண் கொலை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே  யாழ்ப்பாண  மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியா செல்வதாக கணவரிடம் பெண் கூறிசென்ற நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.