தேர்தலுக்கான திகதி திங்களன்று இறுதிமுடிவு
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடிய பின்னர், தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை கூறினார்.
மேலும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தேர்தல் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.
இவேளை வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விருப்பு இலக்கம் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.