சற்றுமுன்னர் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1730ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சற்றுமுன்னர் புதிதாக 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 883 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 836 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதோடு, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் இதுவரையில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.