டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ளமை தெரியவந்துள்ளது.

அவர் வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு கடும் எதிர்ப்பை வௌியிடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சில வருடங்களுக்கு முன்னர் சீனாவில் சிறு வர்த்தக மற்றும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சீனாவிலுள்ள வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பொது நிதி அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் வங்கி கணக்குகள் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.