யாழ். கொக்குவில் பகுதியில் திருடனை கையும்மெய்யுமாக பிடித்த பொது மக்கள்
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் திருட வந்த இளைஞனை பொது மக்கள் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - கொக்குவில், குளப்பிட்டி சந்தி பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீட்டின் கதவை திருடன் உடைக்க முற்பட்ட போது அப்பகுதி மக்கள் அவனை கையும்மெய்யுமாக பிடித்துள்ளனர்.
திருடன், மண் அள்ளும் சவல் மூலம் வீட்டிற்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துள்ளான்.
இதன்போது, அயலவர்கள் மற்றும் கடைகளில் நின்றவர்கள் திருடனை மடக்கிப் பிடித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.