யாழில் கோர விபத்து: நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் - 3 பேர் படுகாயம்

யாழில் கோர விபத்து: நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் - 3 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் ஓட்டியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் கோர விபத்து: நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் - 3 பேர் படுகாயம் | Road Accident In Jaffna Today  

இந் நிலையில், படுகாயமடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.